நன்றி தமிழக அரசு, பசுமை விகடன்.

Thursday 30 October 2014  at October 30, 2014;
பசுமை விகடன் படித்துக்கொண்டிருந்தபோது கொள்ளிடத்திலிருந்து கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க கதவணைகளை கட்ட தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளதாகவும்,  இந்த திட்டத்தால் காட்டுமன்னார்கோயில் விளைநிலங்கள் நல்ல பாசனம் பெறும் என்றும் இருந்தது. அட! நல்ல விஷயமாச்சே இதை எப்படி படிக்க தவறினோம் என்று கட்டுரையை மேலும் படிக்க நேர்ந்தபோது இந்த திட்டத்திற்காக நீண்ட நாட்களாக போராடி வந்த பொதுப்பணித்துரை பொறியாளர் நடராஜன், வினாயகமூர்த்தி, கண்ணன்பிள்ளை, இளங்கீரன் ஆகியோரது பங்கும் அதிகமானது என அறியமுடிகிறது.

இது ஒரு நல்ல விஷயம். இதை நான் மனமார வரவேற்கிறேன். இந்த தருணத்தில் தமிழக அரசுக்கும், பசுமை விகடனுக்கும், நடராஜன், வினாயகமூர்த்தி, கண்ணன்பிள்ளை, இளங்கீரன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றியை காட்டுமன்னார்கோயில் மக்கள் சார்பாக தெரிவித்துகொள்கிறேன்.

அந்த வார பசுமை விகடனில் வந்துள்ள செய்தியையும், அதற்கு முன்னர் வந்த செய்தியையும் அப்பொழுதே இங்கே பதிவிட்டு இருக்கலாம் ஆனால் அது விகடன் காப்பிரைட்ஸ்க்கு எதிரானது என்பதால் என்னால் இந்த செய்தியை பதிவிடமுடியவில்லை. அதன்பிறகு விகடனிடம் எழுத்துபூர்வமான அனுமதி வாங்கியபிறகே, இதை வெளியிடுகிறேன். நன்றி விகடன்



No comments:

Post a Comment