Investors Welcome

Friday 16 December 2011  at December 16, 2011;
தனக்கு பிடித்த எந்த கதையையும் 3 மாதங்களில் செல்லுலாய்டில் பார்க்க ஆசைப்படுபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. அது சக்ஸஸ் ஆகும் என அறியும் அவரின் எண்ண ஓட்டங்கள் அதில் அவரை வெற்றி பெற செய்திருக்கின்றன. தோல்விகள் அதில் சொற்பமே. இரண்டின் ஆவரேஜில் பார்த்தால் இப்பொழுது அவர் இந்தியா போற்றும் வெற்றி இயக்குர், தயாரிப்பாளர்.

வெற்றியை அடைய ஹார்ட் வொர்க் என்பதை விட ஸ்மார்ட் வொர்க்தான் தேவை என கருதுபவன் நான். தளங்களின் RSS Aggregator களை  டைம்லைனில் ரீடரில் படிப்பதை, கொஞ்சம் மாற்றி அமைத்து Twitter ஆக ஆரம்பித்த pyra labs யின் ஸ்மார்ட் வொர்க் என்னை வியக்க வைத்தது. இன்றளவும் iphone யின் விருப்ப தேர்வாகி இருக்கின்ற instagram, டாப் டென்னில் இருக்ககூடிய Angry bird எல்லாம் அன்றாட புழக்கத்தில் இருக்கக்கூடியவையே. கொஞ்சம் மெருகேற்றி கொடுத்தால் சந்தையில் விலைபோகும் என்பதற்கு இதுவே சாட்சி.

நீட்டி முழக்காமல் விஷயத்திற்கு வருவமேயானால் தற்போது இந்தியாவில் Bidding சைட் நன்றாக வொர்க்அவுட் ஆகிறது என்பதை சில விஷயங்கள் எனக்கு புரியவைத்தது. ஐடியா கிடைத்தால் capital venture களை நாடி நாம் செல்லமுடியாது. ஏனென்றால் அதற்கான அடிமை சாசனத்தை அவர்கள் நம்மிடம் எழுதிவாங்கிவிடுவார்கள். capital உள்ளவர்களை நாம் அடையாளம் காண்பதுதான் இந்த போஸ்டின் நோக்கம்.

கான்செப்ட் ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை, ஏற்கனவே ebay auction யில் பார்த்ததுதான். என்ன ஒன்று, இதில் third party vendor ஐ சேர்க்காமல் நாமே நேரடியாக ஆக்ஷ்ன் செய்யலாம், அதுவும்  ஒரு துறை சார்ந்த பொருளாக, வெர்டிக்கலாக. குரூப் பையிங் விஸ்வரூப வளர்ச்சிக்கு முன்னால் இது என்ன பெரியதாக சாதிக்க முடியும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் group buying சைட்டுகள் காணும் அசுரவளர்ச்சி விற்பனையை அதிகரிக்கும் அதே நேரத்தில், விற்பனையாளர்கள் தங்களின் கைக்காசை இழப்பதும், கஸ்டமர்கள் நடத்தப்படும் விதம் அவர்களை consumer complaints forum த்தில் எழுத வைப்பதுவுமாக இருக்கிறது. இதன் முதல் அறிகுறியாக பிரபல டீலீங் சைட் சமீபத்தில் மூடப்பட்டது. அதனால் இனி குரூப் பையிங்->நத்திங்

விழுந்தால் வீட்டிற்கு, விழாவிட்டால் நாட்டிற்கு கான்செட் கன்வென்ஷனாக இருந்தாலும், எப்பொழுதும் கேட்சிதான். ஏலம் கேட்கும்போதெல்லாம் அவரின் கேஷ் பேக்கேஜில் இருந்து தொகை எடுக்கப்படும், இதேபோல் அனைவரும் பங்கேற்று அசலுக்கு தாங்கும் என்றவுடன் கவுண்டவுண் ஸ்டார்ட் ஆகும். முடியும் தருவாயில் கேட்ட கடைசி ஆள் பரிசை தட்டி செல்ல இந்த கான்செப்ட முடியும்.

இது பணம் படைத்தவர்கள் ஆடும் சூதாட்டம் என நீங்கள் நினைத்தாலும் இது அதுவல்ல. கஸ்டமர்களை கவர நாம் ஆரம்பிக்கும்  இந்த விளையாட்டு அவர்களின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கும். எப்படி என்கிறீர்களா? அதை நேரடியாக விவாதிப்போம்.



No comments:

Post a Comment